ஸ்ரீரங்கம் சிலை வழக்கு: டிவிஎஸ் வேணு சீனிவாசனை கைது செய்யத்தடை!

ஸ்ரீரங்கம் கோவில் சிலை வழக்கில், டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
 | 

ஸ்ரீரங்கம் சிலை வழக்கு: டிவிஎஸ் வேணு சீனிவாசனை கைது செய்யத்தடை!

ஸ்ரீரங்கம் கோவில் சிலை வழக்கில், டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் உற்சவர் சிலைக்கு பதிலாக  போலி சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள பல  சிலைகள் காணாமால் போனதாகவும் நரசிம்மன் ரங்கராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், கோவில் நிர்வாகம் தரப்பு எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து கோவில் சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பான புகைப்படங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

பின்னர் நேற்று நடந்த விசாரணையில், ஸ்ரீரங்கம் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, இதனை ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த டிவிஎஸ் குழுமத்தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். "ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் என பல கோவில் திருப்பணி குழுக்களில் நான் இருந்துள்ளேன். ஆனால் ஸ்ரீரங்கம் கோவில் சிலை காணாமல் போன  விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது’ என தெரிவித்திருந்தார். 

அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், டி.வி.எஸ் தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரத்திற்கு கைது செய்யக்கூடாது என நீதிபதிகள்  உத்தரவிட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP