பைக்கில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் அவசியம்: உயர் நீதிமன்றம்

ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை பொதுமக்கள் பின்பற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தெரிவிக்கையில், "இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட், அதே போன்று கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். இந்த விதிமுறையாக கடைபிடித்தால் 90% விபத்து மரணங்கள் தடுக்கப்படும். எனவே 
கார்களில் சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியும் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை  காவல்துறை மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP