அதிகாரிகள் அரசின் ஊதுகுழலாகவும், பொம்மைகளாகவும் உள்ளனர்: சென்னை உயர்நீதிமன்றம் 

கோயில் நிலங்களில் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரம் தெரியாமல், கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என்று, கோயில் நிலங்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 | 

கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தோருக்கு பட்டா தரப்படும் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசின் அரசாணை ஆக்கிரமிப்போருக்கு உதவும் வகையில் இருப்பதால் ரத்த செய்ய வேண்டும் என மனுவி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பன விசாரணையின்போது, நிலங்களை விற்கும் அரசாணை கோயில்களுக்கு எப்படி பலனளிக்கும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் அரசின் ஊதுகுழலாகவும், ரிமோட் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் உள்ளனர் என்று வேதனையுடன் தெரிவித்தனர். அரசாணை மூலம் கோயில் நிலங்களை விற்க அறநிலைத்துறையை அரசு வற்புறுத்துகிறதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP