சரவணபவன் ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவர் உடனடியாக போலீசாரிடம் சரணைடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 | 

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், சரவண பவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ராஜகோபாலின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், கடந்த மார்ச் 29ம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை சிறைத்த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. 

இதில், ராஜகோபால் தவிர 9 பேர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். உடல்நிலையை காரணம் காட்டி சரணடைய கால அவகாசம் கோரி, உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், ஜனார்த்தனனும் சரணடைய அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில், ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவர் உடனடியாக போலீசாரிடம் சரணைடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

newstm.in

சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை! வழக்கின் முழு விபரம் உள்ளே...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP