ராதாபுரத்தில் மறுவாக்கு வழக்கு... கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

ராதாபுரத்தில் மறுவாக்கு வழக்கு... கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!
 | 

ராதாபுரத்தில் மறுவாக்கு வழக்கு... கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

 ராதாபுரம் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்ற அப்பாவு தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் நிராகரித்து விட்டது. 
நீதியரசர் அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக  இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அப்பாவு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி  உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்  என்று கோரிய போது, `இருதரப்பினர் வாதங்களையும் நாங்கள் விரிவாக கேட்க வேண்டியதிருப்பதால் உடனடியாக விசாரிக்க இயலாது "என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கடந்த திங்களன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜனவரி மாதம் விசாரணை நடைபெறும் என ஏற்கனவே உத்தரவிட்டு இருப்பதால் வரும் ஜனவரி 14ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியதுடன் உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே  வழங்கப்பட்ட தடை ஆணை தொடரும் எனவும் அறிவித்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP