தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொது சின்னத்தை வழங்க பரிசீலிக்க வேண்டும் என்றது உச்ச நீதிமன்றம்.
 | 

தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தினகரனின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும், அமமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொது சின்னத்தை வழங்க பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

வாதத்தின் போது, அமமுகவை ஏன் கட்சியாக பதிவு செய்யவில்லை. பதிவு செய்யப்படாத ஒரு கட்சிக்கு எப்படி மொத்தமாக  பொதுச் சின்னம் கேட்கிறீர்கள்?, இரட்டை இலை, குக்கர் சின்னம்  இரண்டு சின்னங்களை ஏன் கேட்கிறீர்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு கட்சியை இன்றே பதிவு செய்ய தயாராக இருப்பதாகவும், அதன் பிறகு குக்கர் சின்னம் அல்லது ஏதாவது ஒரு பொதுச் சின்னத்தை தாருங்கள் என்று, டிடிவி தரப்பு வாதம் செய்தது.

இதனைத்தொடர்ந்து, கட்சியை பதிவு செய்து 30 நாட்களுக்கு பிறகு தான் ஒரு கட்சிக்கு சின்னத்தை ஒதுக்க முடியும், எனவே, தினகரன் கட்சிக்கு உடனே குக்கர் சின்னத்தை கொடுக்க முடியாது, கட்சியை இப்போதே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுச்சின்னத்தை தர முடியாது  என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக  தெரிவித்தது.

மேலும், அமமுகவினர் சுயேட்சை வேட்பாளர்கள் என்பதால் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாகத்தான் சின்னம் தர முடியும். தினகரனுக்கு சட்டப்படி தனிச்சின்னம் தான் தரமுடியும், பொதுச்சின்னம் தர முடியாது. மேலும், அமமுக வேட்பாளர் அனைவருக்கும் பொதுச்சின்னம் தர  முடியாது என கூறியுள்ளது.

இறுதியில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அமமுக-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்றும், அனைத்து வேட்பாளர்களுக்கும் வேறு ஏதாவது பொதுச்சின்னம் ஒதுக்க வேண்டும், என்றும் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP