சர்க்கரை வாங்கும் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 பரிசுத்தொகை வழங்க உத்தரவு!

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் சர்க்கரை வாங்கும் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

சர்க்கரை வாங்கும் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 பரிசுத்தொகை வழங்க உத்தரவு!

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல், சர்க்கரை வாங்கும் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் சிறப்புத்தொகுப்புடன் ரூ. 1,000 பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை முதல் ரேஷன் கடைகளில் இந்த சிறப்பு பரிசுத் தொகை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் சர்க்கரை வாங்கும் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

முன்னதாக இன்றைய வழக்கின் விசாரணையில், நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்ய நாராயணா அமர்வு தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தானே வழங்குவீர்கள்.. இந்தாண்டு மட்டும் ஏன் பரிசுத்தொகையும் சேர்த்து வழங்குகிறீர்கள்? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில், 'வரும் ஆண்டுகளில் புதிய விதி உருவாக்கப்பட்டு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும், அரசு தரப்பில், 'சர்க்கரை அட்டைதாரர்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தான். மொத்தம் 10.1 லட்சம் சர்க்கரை சர்க்கரை அட்டைதாரர்களில் 40% பேர் ஏற்கனவே வாங்கிவிட்டார்கள். எனவே, மீதியுள்ள 60% சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும்' என்று வாதிடப்பட்டது. 

தொடர்ந்து நீதிபதிகள் பேசுகையில், "இந்த பரிசுத் தொகையை பெற மக்கள் வெயிலில் காத்துக்கிடக்கின்றனர். தொலைக்காட்சியில் வரும் செய்திகளை பார்க்கும்போது வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் வெயிலில் நின்று கஷ்டப்படுவது தெரிகிறது. இதற்கு தமிழக அரசு நேரடியாக கொடுக்காமல் மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தலாமே?" என்றும் கேள்வி எழுப்பினர்.

இறுதியில், சர்க்கரை வாங்கும் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP