மாணவர் எண்ணிக்கை குறைவது பற்றி ஆய்வு தேவை: நீதிமன்றம்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது தொடர்பாக அரசு கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
 | 

மாணவர் எண்ணிக்கை குறைவது பற்றி ஆய்வு தேவை: நீதிமன்றம்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது தொடர்பாக அரசு கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பயன்படுத்தும் நடைமுறைகளை சீராய்வு செய்யக்கோரி மது என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கட்டாய கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளால் கல்வியின் தரம் உயரவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் அரசுப்பள்ளிகளை இணைக்கத்திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது தொடர்பாக அரசு கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிமன்றம், இந்த மனு குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்னை செயலர், இயக்குநர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP