அமைச்சர் வேலுமணி பற்றி ஸ்டாலின் பேச தடையில்லை

உள்ளாட்சித் துறை மீதான வழக்கு மற்றும் பொள்ளாச்சி சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
 | 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீதான வழக்குகள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக, அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டி இருந்தார். மேலும், இதுதொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பொள்ளாச்சி சம்பவம் மற்றும் உள்ளாட்சித்துறை வழக்குகள் குறித்து ஸ்டாலின் பேசத் தடையில்ல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு கட்சியினர், மற்ற கட்சியினர் மீது குற்றம் சாட்டுவது வழக்கமான ஒன்று தான் என்றும் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP