28ஆம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த உத்தரவு!

எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் இன்று ஆஜராகவில்லை.
 | 

28ஆம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த உத்தரவு!

எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் இன்று ஆஜராகவில்லை.

1996ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிறுவனத்துக்காக வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக சசிகலா மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில், அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை இன்று  காணொலி மூலம் ஆஜர்படுத்தும்படி  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவு தாமதமாக கிடைத்ததால் காணொலி மூலம் சசிகலாவை ஆஜர்படுத்த முடியவில்லை என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்துவைத்த நீதிமன்றம், அன்றய தினம் சசிகலாவை காணொலி மூலம் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP