சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் ஆட்சியர் ரோஹணி ஆஜர்....!

அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றக்கோரிய வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 | 

சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் ஆட்சியர் ரோஹணி ஆஜர்....!

அதிமுக கொடிக்கம்பத்தை  அகற்றக்கோரிய வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். 

சேலம் பூலவாரி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், தங்கள் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கு இடையூறாக அதிமுகவினர் அமைத்துள்ள கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கொடி கம்பம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டது குறித்த உரிய ஆவணங்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை  பொறியாளர் ஆகியோர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டதோடு, இந்த வழக்கை  ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP