ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை: முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை 

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 | 

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை: முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை 

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

2016இல் நடைபெற்ற ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தலில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 1,508 தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. 19,20,21 சுற்றுகளில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

இந்த நிலையில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்கக்கோரி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க அக்டோபர் 23ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து ஒத்திவைத்துள்ளது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்எல்ஏ இன்பதுரை தரப்பு முறையிட்டது. முறையீட்டை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP