டிக் டாக் செயலி மீதான தடை தொடரும்: மதுரைக்கிளை

டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மின்னணுவியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையை எதிர்மனுதாரர்களாக சேர்த்து வழக்கின் விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 | 

டிக் டாக் செயலி மீதான தடை தொடரும்: மதுரைக்கிளை

டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அளித்த மனுவில், "டிக்டாக் செயலியை, இளைஞர்கள், குழந்தைகள், மாணவர்கள் அனைத்து தரப்பினரும் பயன்படுத்துவதால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த செயலியினால், 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் உள்ளது. மக்களுக்கு தீமையை இழைக்கும் இந்த டிக்டாக் செயலிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையிலும், 'டிக்டாக்' செயலியின் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

தொடர்ந்து, மதுரைக்கிளை நீதிமன்றத்தில் இன்று வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணையில், டிக் - டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி, மின்னணுவியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையை எதிர்மனுதாரர்களாக சேர்த்து வழக்கின் விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP