சின்னதம்பி வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு..!

சின்னதம்பி யானையின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு தலைமை வழக்கறிஞரின் முறையீட்டை ஏற்று வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு
 | 

சின்னதம்பி வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு..!

சின்னதம்பி யானையின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை சின்ன தம்பியை கும்கி யானையாக மாற்றுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் அருண் பிரசன்னா மற்றும் முரளிதரன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், சின்னதம்பிக்கு இயற்கை உணவுகளை கொடுத்து பழக்கி ஏன் வனப்பகுதிக்குள் அனுப்பக்கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் சின்னதம்பி யானையின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

இதை தொடர்ந்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யானைகளை முகாமிற்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை எனவும், முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நாளை ஆஜராகி விளக்கமளிப்பார் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP