திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி!

பணப்பட்டுவாடா நடந்துள்ளதால் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 | 

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெற்று உள்ளது என்றும் இதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் நிஷா மற்றும் தண்டபாணி அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், "தேர்தல் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. வேண்டுமென்றால் நீங்கள் தேர்தல் ஆணையத்தை அணுகலாம்" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP