Logo

மேலவளவிற்குள் 13 பேர் நுழையக்கூடாது என உத்தரவு

மேலவளவு கொலை வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் வழக்கு முடியும் வரை ஊருக்குள் நுழையக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, முன்விடுதலை தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.
 | 

மேலவளவிற்குள் 13 பேர் நுழையக்கூடாது என உத்தரவு

மேலவளவு கொலை வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் வழக்கு முடியும் வரை ஊருக்குள் நுழையக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, முன்விடுதலை தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. வழக்கு முடியும் வரை 13 பேரும் வேலூரில் தங்கி, அங்கு இருப்பதை மதுரை, வேலூர் எஸ்.பி.க்கள் உறுதி செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

மேலும், சமூகத்தின் மீதான அக்கறையோடு இந்த வழக்கை நீதிமன்றம் கையாள்கிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், 13 பேரின் முகவரி, செல்போன் எண்களை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். 2,4ஆம் வார ஞாயிற்றுக்கிழமைகளில் நன்னடத்தை அலுவலர் முன்பு 13 பேரும் ஆஜராக வேண்டும். முன்விடுதலை ஆனவர்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தால் அதை மதுரை எஸ்.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை மதுரை மாவட்ட எஸ்.பி. உறுதி செய்ய வேண்டும் என ஆணையிட்டனர்.

இதையடுத்து, ஜனவரி 2ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு,  ஜனவரி 6ஆம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP