மேயர் மறைமுக தேர்வுக்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தில் மேல்முறையீடு

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
 | 

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்தார். மேலும் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்வு முறை தொடர்பான அவசர சட்டத்தை  ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவசர வழக்காக விசாரிக்கும் படி வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். நீதிமன்ற அறிவுறுத்தல்படி மனு இன்று தாக்கல் செய்யப்பட்டால் நாளை விசாரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP