நளினிக்கு ஒரு மாத பரோல்: நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்ட நிலையில் ஒரு மாதம் வழங்கியுள்ளது.
 | 

மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுக்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு வாதாடினார். ஆனால், நளினிக்கு 6 மாத பரோல் வழங்க தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP