விழா நடத்தாமல் எம்.ஜி.ஆர் நினைவு வளைவை திறக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம்

மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்கலாம், ஆனால் விழா போன்று எதுவும் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.ஜி.ஆர் நினைவு வளைவு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
 | 

விழா நடத்தாமல் எம்.ஜி.ஆர் நினைவு வளைவை திறக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம்

மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்கலாம், ஆனால் விழா போன்று எதுவும் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு எதிரே அமையவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. 

விழா நடத்தாமல் எம்.ஜி.ஆர் நினைவு வளைவை திறக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம்

எம்.ஜி.ஆர் நினைவு வளைவு அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், அரசியல் லாபத்துக்காக, மக்களின் வரிப்பணத்தில் எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்கிறது என்றும் எனவே அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த மனு மீதான விசாரணையில், எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழ்நிலையில், நீதிபதிகள் அரசுத்தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வளைவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் நீங்கள் அதனை மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்தலாமே..? எம்.ஜி.ஆரின் கொள்கைகளும் அதுதானே?' என்று கேள்வி எழுப்பினர். 

பின்னர்  அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது. இறுதியில் நீதிபதிகள், "விழா நடத்தாமல் எம்.ஜி.ஆர் நினைவு வளைவை திறக்கலாம். எந்தவித கட் அவுட், பேனர் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வளைவை திறக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP