உள்ளாட்சி தேர்தல் - தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில் தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 | 

உள்ளாட்சி தேர்தல் - தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில் தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் படி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தேர்தல் தொடர்பாக பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர் குறித்தும் வாக்காளர்கள் அறிந்து கொள்வது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்வது போல் தமிழக தேர்தல் ஆணையம் செய்வதில்லை.

கடந்த தேர்தலுக்கான கணக்கினை முறையாக அளிக்காதவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விபரங்கள் வாக்காளர்களுக்கு தெரிவதில்லை. ஆகவே , வரும் உள்ளாட்சித் தேர்தல் முதல்,  உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விபரங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பதிவேற்றம் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP