உள்ளாட்சி தேர்தல்: அவகாசம் கோரியது மாநில தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளது.
 | 

உள்ளாட்சி தேர்தல்: அவகாசம் கோரியது மாநில தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளது. 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து  ஓ.பன்னீர் செல்வம் தற்காலிக முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். அதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து இரண்டரை ஆகியும் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக திமுக உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டது. கால அவகாரம் வழங்கிய உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP