குட்கா ஊழல் வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் உள்ள குட்கா ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

பொதுமக்களின் உடல்நலன் கருதி, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடந்த 2013ம் ஆண்டுதமிழக அரசு தடை செய்தது. ஆனால் 2013ம் ஆண்டு எடுத்த ஒரு சர்வேயில், தமிழகத்தில் சுமார் 28 லட்சம் பேர் உபயோகிப்பதாக தெரிய வந்தது.

இதையடுத்து, தடையை மீறி குட்கா விற்பனை செய்வது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் குட்கா ஊழல் வழக்குகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்று குட்கா விற்பனையை அனுமதிப்பதாக ஆதாரங்கள் சில வெளியாகின. 

பின்னர் தி.மு.கவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், குட்கா ஊழல் வழக்குகளை ஊழல் வழக்குகளில் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகளின் பங்கு இருப்பதால் வழக்குகளை சிபிஐ தரப்புக்கு மாற்ற வேண்டும் அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த மனுவின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்றைய விசாரணையில்  மனுதாரரின் வாதத்திற்கு பிறகு, அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குட்கா ஊழல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP