புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை: கேரள அரசு பதில் மனு

முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை எனவும் மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 | 

புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை: கேரள அரசு பதில் மனு

முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக செயல்படுவதாக கூறி  தமிழக அரசு கேரளா அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை எனவும், மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கேரள அரசின் பதிலை ஏற்று தகவல்களை திரட்ட கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP