Logo

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கார்நாடக அரசுக்கு அனுமதி!

தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்ட தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 | 

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கார்நாடக அரசுக்கு அனுமதி!

தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்ட தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில்,  தமிழகத்தில் தென்பெண்ணை ஆறு பாயும் நிலையில், தங்களிடம் உரிய அனுமதி பெறாமல் கர்நாடக அரசு அணை கட்டி வருவதாகவும், 1892ஆம் ஆண்டு நநி நீர் ஒப்பந்தத்தை மீறி கர்நாடக அரசு செயல்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்ட தடையில்லை என இன்று தீர்ப்பளித்தது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP