கன்னியாகுமரி: விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று, மதுரையைச் சேர்ந்த இளந்தமிழன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 | 

கன்னியாகுமரி: விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நீக்கப்பட்ட  வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பித்து தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிந்து கொள்ளலாம் என்று, மதுரையைச் சேர்ந்த இளந்தமிழன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. மனுதாரர்     குறிப்பிட்ட பகுதியில் 2,138 வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் உரிய ஆவணத்துடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம்’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவின் பதில் மனுவை ஏற்ற, சென்னை உயர்நீதிமன்றம்,  நீக்கப்பட்ட  வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பித்து தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிந்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டு  இந்த வழக்கை முடித்து வைத்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP