கச்சத்தீவு திருவிழா; அடுத்த ஆண்டு முதல் நாட்டுப்படகில் செல்ல அனுமதி!

கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகுகளில் செல்ல அடுத்த ஆண்டு முதல் அனுமதி வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
 | 

கச்சத்தீவு திருவிழா; அடுத்த ஆண்டு முதல் நாட்டுப்படகில் செல்ல அனுமதி!


கச்சத்தீவு திருவிழாவிற்கு மோட்டார் பொருத்திய நாட்டுப்படகுகளில் செல்ல அடுத்த ஆண்டு முதல் அனுமதி வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இந்திய-இலங்கை கடல்பகுதியில் உள்ள கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் அதிகளவில் கலந்துகொள்வர். தமிழகத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இந்த விழாவிற்கு செல்கின்றனர். இந்த ஆண்டு வருகிற 23 மற்றும் 24 தேதிகளில் திருவிழா நடைபெற இருக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு செல்வதற்கு தமிழகத்தில் இருந்து சுமார் 2,100 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இதற்கிடையே, ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு அளித்தனர். அதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு அதிக தொலைவில் இருப்பதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி, திருவிழாவிற்கு செல்லும்போது மோட்டார் பொருத்திய நாட்டு படகுகளில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கபட்டது. இந்த வழக்கின் இன்றைய விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், 'அடுத்த வருடம் முதல் கச்சத்தீவு திருவிழாவிற்கு மோட்டார் நாட்டுப்படகுகளில் செல்ல அனுமதிக்கப்படும். இந்த வருடம் தற்போது குறுகிய நாட்களே இருப்பதால் அனுமதி வழங்க முடியாது' என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP