ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்ட தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், நினைவு மண்டபம் கட்ட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
 | 

ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்ட தடையில்லை:  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு  சென்னை மெரினாவில் நினைவு மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இது தொடர்பான விசாரணை பல்வேறு கட்டங்களாகக் நீதிபதிகள் சத்ய நாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்த அமர்வு முன்பாக நடைபெற்று முடிவுற்றது.  இருந்தபோதிலும், இவ்வழக்கு தொடர்பான இறுதித்  தீர்ப்பு நாள் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்  இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில், 'சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் போது ஜெயலலிதா உயிருடன் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதால் தற்போது அவரை குற்றவாளி என்று கூற முடியாது. மேலும் இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள்  நாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் உத்தரவிட்டனர். 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP