ஜல்லிக்கட்டு வன்முறை: 64 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் !

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 64 பேர் மதுரை மாவட்ட 4வது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகினர்,
 | 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜல்லிக்கட்டு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், * ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் , ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டோம் என அப்போதைய தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உறுதி அளித்து இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை நடைபெற்ற இடத்தில் தான் விசாரணை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும், மாறாக வேறு இடத்தில் விசாரணை நடந்தால் அரசுக்கு ஆதரவாக தான் விசாரணை ஆணையத்தில் சாட்சி சொல்லுவார்கள் எனக் கூறினார். 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 2017 ல் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்திய 64 பேர் மீது சிபிசிஐடி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP