சிலைகடத்தல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத்தடை - உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
 | 

சிலைகடத்தல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத்தடை - உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் சிலைகடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்படவில்லை என கூறி வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவ, ஆதிகேசவலு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

இறுதியில், சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க காலக்கெடு எதுவும் இல்லாமல் இடைக்காலத்தடை விதித்து நீதிபதிகள்  உத்தரவிட்டனர். மேலும், வழக்குகள் ஏன் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது என்பது குறித்து தமிழக அரசும் டிஜிபியும் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP