Logo

 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யா, தந்தைக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில், கைதான உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
 | 

இந்த விவகாரம் தொடர்பாக, உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன், திருப்பதியில் நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு, அவர்கள் சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு, தேனிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில், இன்று சிபிசிஐடி, அவர்களிடம் நடத்திய விசாரணையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டனர். மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஒப்புகொண்டுள்ளார்.

இந்த நிலையில், உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனை கைது செய்த, சிபிசிஐடி போலீசார், தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இரண்டு பேரையும் அக்டோபர் 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் மீது ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலியாக ஆவணங்களை தயாரித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP