இளையராஜாவின் அனுமதியின்றி அவரது பாடல்களை பயன்படுத்தக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதியின்றி அவரது பாடல்களை வர்த்தகரீதியில் பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.
 | 

இளையராஜாவின் பாடல்களை வர்த்தகரீதியில் 10 ஆண்டுகள் பயன்படுத்த உரிமை உள்ளதாகவும், இளையராஜா ராயல்டி தொகை கேட்பதற்கு தடை விதிக்கக்கோரியும் அகி மியூசிக்  நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த அவரிடம் முறையான அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம், இளையராஜாவின் பாடல்களை வர்த்தகரீதியில் அவரது அனுமதியின்றி பயன்படுத்த ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அகி மியூசிக்  நிறுவனம் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP