Logo

நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நீட் தேர்வு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது.
 | 

நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நீட் தேர்வு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது. 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரின்ஸ் கஜேந்திரபாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதனை தமிழக அரசு பெற்றுக்கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.  

 அதே நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 

விசாரணையின் முடிவில் நீதிபதிகள், "இரண்டு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. வேண்டுமென்றால், மசோதாக்கள் மீது சரியான நடவடிக்கை இல்லை எனக் கூறி தனியாக வழக்கு தொடரலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP