ஹெல்மெட் : நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை!

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் விதிகளை முழுமையாக அமல்படுத்தக்கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். பின்னால் அமந்திருப்பவர் ஹெல்மெட் அணியாவிட்டாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், எடப்பாடியில் ஹெல்மெட் போடாமல் சென்ற 2 காவலர்கள் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிகாட்டி வேதனை அடைந்தனர்.

மேலும், ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்தாத காவலர்கள் குறித்து ஜூலை 5-ஆம் தேதி அறிக்கை தர உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்கும் என்று காவல்துறைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP