நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா

நீதிமன்றத்தை அவதூறாக பேசியது தொடர்பாக இன்று எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் மன்னிப்பு கோரினார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
 | 

நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா

நீதிமன்றத்தை அவதூறாக பேசியது தொடர்பாக இன்று எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் மன்னிப்பு கோரினார். 

பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, காவல்துறையையும், நீதித்துறையையும் அவதூறாக பேசினார். இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள் அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்களது குடும்பங்களையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார். மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

நீதிமன்றத்தை அவதூறாக பேசியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 22ம் தேதிக்குள் எச்.ராஜா நீதிமன்றத்தின் முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்நிலையில் இன்று எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளித்தார். அதில், தான் பேசியது குறித்து பின்னர் வருந்தியதாக நீதிபதிகள் முன்பு தெரிவித்தார். தன் தவறை உணர்வதாகவும், பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP