வருங்கால சந்ததியினர் பாட்டிலில்தான் நீரை பார்க்க நேரிடும்: உயர்நீதிமன்றம் கவலை

தமிழகத்தில் நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் பாட்டிலில்தான் நீரை பார்க்க நேரிடும் என்று கவலையுடன் தெரிவித்துள்ளது.
 | 

மழைநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க நவீன நீர்மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்த கோரி வி.பி.ஆர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏரி மற்றும் குளங்களின் நீர்பிடிப்பு பகுதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் மழை நீர் வீணாவதை தடுக்க முடியும் என்றும்,  நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் வெள்ள சேதங்களுக்கு காரணமாக அமைவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை 6 மாதங்களில் அளவிட வேண்டும் என்றும்,  நீர்வழித்தடங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், ‘நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் பாட்டிலில்தான் நீரை பார்க்க நேரிடும். இலவசங்களுக்கு  நிதி ஒதுக்குவதற்கு பதில் வீணாகும் நீரை சேமிக்க அரசு அணைகளை கட்டலாம்’ என  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP