மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

நாளை முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில், நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளது. மேலும், டிசம்பர் 17க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
 | 

மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

நாளை முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில், நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளது. 

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 18,000க்கும் மேற்பட்டோர் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். 

இதற்கிடையே மதுரையைச் சேர்ந்த யுனீஸ் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.  அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவின் விசாரணையில், போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு நீதிமன்றம் மருத்துவர் சங்கத்திற்கு அறிவுரை வழங்கியது. நீதிபதிகளின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். 

மேலும், அரசு மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்து வரும் டிசம்பர் 17க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP