கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீதான உயர்நீதிமன்ற கருத்து நீக்கம்

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சென்னை உயர் நீதிமன்ற கருத்து திரும்பபெறப்பட்டது.
 | 

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீதான உயர்நீதிமன்ற கருத்து நீக்கம்

கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான சென்னை உயர் நீதிமன்ற கருத்து திரும்பபெறப்பட்டது.

தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில்  உதவி பேராசிரியர்கள் சாமுவேல் டென்னிசன் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் 3 ஆண்டுகள் அவர் வினா தாள் தயாரிக்கவும் விடைத்தாள் திருத்தவும் தடை விதித்தார். இந்த தடையை நீக்கக்கோரி சாமுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என பலர் கருதுவதாகவும், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார். 

இந்நிலையில், வழக்கிற்கும், கருத்துக்கும் தொடர்பு இல்லை என கிறிஸ்தவ மிஷனரிகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து, தன்னுடைய 2 கருத்துக்களையும்  நீதிபதி எஸ்.வைத்தியநாதன் திரும்ப பெற்றுக்கொண்டார். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP