நேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா?: நீதிமன்றம் அதிரடி கேள்வி

மழை நீரை சேமித்து வைக்க திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
 | 

நேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா?: நீதிமன்றம் அதிரடி கேள்வி

மழை நீரை சேமித்து வைக்க திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மழைநீர் பூமிக்குள் செல்ல வடிகால் அருகே கான்கிரீட் அமைக்க வேண்டாம் என உத்தரவிடக் கோரி சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கில், நேற்று பெய்த மழைநீர் வடிந்துவிட்டதா?, என்னுடைய காரில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வரத் தயாரா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசு திட்டங்களுக்கு பொதுப்பணித் துறை பொறியாளர்கள் வகுக்கும் செலவின மதிப்பீட்டில் குளறுபடி உள்ளது என நீதிபதி கூறினார். மேலும், மழை நீர் வடிகால் அமைக்க அரசு எடுத்த நடவடிக்கை பற்றி கூடுதல்  விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இவ்வழக்கை ஜூலை 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP