மேகி நூடுல்ஸுக்கு மீண்டும் நெருக்கடி!

மேகி நூடுல்ஸில் ஆபத்தான டாக்சின்கள் உள்ளதாக நெஸ்லே நிறுவனத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு அரசு வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது உச்ச நீதிமன்றம்.
 | 

மேகி நூடுல்ஸுக்கு மீண்டும் நெருக்கடி!

மேகி நூடுல்ஸில் ஆபத்தான டாக்சின்கள் உள்ளதாக நெஸ்லே நிறுவனத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு அரசு வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது உச்ச நீதிமன்றம். 

இந்திய உண்வு பாதுகாப்பு ஆணையம், கடந்த 2015ம் ஆண்டு, நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில், பொதுமக்களுக்கு ஆபத்தான டாக்சின்ங்கள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, தேசிய நுகர்வோர் பிரச்னைகள் கமிஷன் (NCDRC), நெஸ்லே நிறுவனத்தின் மீது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி, நெஸ்லே நிறுவனம் 640 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரியிருந்தது. 

2015ம் ஆண்டின் டிசம்பர் மாதம், மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI), மேகி நூடுல்ஸை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் மீது இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். CFTRI நடத்திய ஆராய்ச்சியில், மேகி நூடுல்ஸில் ஆபத்தான பொருட்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அது மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க இருக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP