நளினியை சந்திக்க முருகனை அனுமதிக்க உத்தரவு 

மனைவி நளினி, உறவினர்களை சந்திக்க ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனை அனுமதிக்கும்படி சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

 நளினியை சந்திக்க முருகனை அனுமதிக்க உத்தரவு 

மனைவி நளினி, உறவினர்களை சந்திக்க  ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனை அனுமதிக்கும்படி சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முருகனை வேறு அறைக்கு மாற்றிய சிறைத்துறையின் நிர்வாக உத்தரவில் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறைவிதிகள்படி அறை மாற்றம் செய்யப்பட்டது;முருகனை தனிமைச் சிறையில் அடைக்கவில்லை என்றும், முருகன் அறையில் இருந்து செல்போன், சிம் கார்டு போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

மேலும், முருகனின் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது; உறவினர்களை பார்க்க அனுமதியுங்கள் என்ற நீதிபதிகள் கந்தரேஷ், டீக்காராமன், முருகன் உண்ணாவிரதத்தை கைவிட அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP