குழந்தைகள் விற்பனை வழக்கு : 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 | 

குழந்தைகள் விற்பனை வழக்கு : 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை குறித்த வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் கடந்த ஏப்ரல் 24 -ஆம் தேதி கைதான அருள்சாமி, ரேகா, நந்தகுமார் ஆகியோர் ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம், மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் விற்பனை வழக்கில் செவிலியர் அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரம் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP