பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.

விசாரணையில், இந்த விவகாரத்தில் பணியில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணையை குறித்த அறிக்கையை பரங்கிமலை காவல்துறையினர், மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணையை சென்னை மாநகர காவல் ஆணையர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP