8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்தத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

மத்திய அரசு தாக்கல் செய்த சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையில் முரண்பாடுகள் இருந்ததையடுத்து, சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
 | 

8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்தத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நில அளவீடு பணிகள் முடிவுற்ற நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் தொடங்கிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில், முதற்கட்டமாக நிலத்தை கையகப்படுத்த நீதிபதிகள் தடை விதித்தனர். அடுத்த விசாரணையில், மக்களின் நன்மைக்காக அமைக்கப்படும் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்களின் நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்காலிகமாக நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்தது. மேலும் 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதேபோல் திட்டத்தை இறுதி செய்யும்வரை எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையில் முரண்பாடுகள் இருந்ததையடுத்து, சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP