திருமுருகன் காந்தி மீதான UAPA சட்டம் ரத்து: சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

திருமுருகன் காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை (யுஏபிஏ) ரத்து செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. ஆனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதற்காக 505(1)(பி) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என நீதிபதி ஆலோசனை
 | 

திருமுருகன் காந்தி மீதான UAPA சட்டம் ரத்து: சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

திருமுருகன் காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை (யுஏபிஏ) ரத்து செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி மீது நுங்கம்பாக்கம் போலீசார் யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்விழி முன்பாக நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற விசாரணையில் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்துக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்து நீதிபதி மலர்விழி உத்தரவிட்டார்.

ஆனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக இந்திய தடுப்பு சட்டம் 505(1)(பி) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்று கூறினார். 

யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் 6 மாதங்களுக்கு எவ்வித விசாரணையுமின்றி சிறையில் அடைக்க முடியும் மற்றும் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP