கொலை மிரட்டல் வழக்கு: பிரபல தமிழ் நடிகர் நீதிமன்றத்தில் சரண்

கொலை மிரட்டல் வழக்கில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மணப்பாறை நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.
 | 

கொலை மிரட்டல் வழக்கு: பிரபல தமிழ் நடிகர்  நீதிமன்றத்தில் சரண்

கொலை மிரட்டல் வழக்கில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மணப்பாறை நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கிற்காக, நீதிமன்றத்தில் ஆஜரான மணப்பாறை சேர்ந்த வழக்கறிஞர் பாண்டி என்பவர், வழக்கறிஞர் கட்டணம் கேட்ட பொழுது, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக, பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மணப்பாறை காவல்நிலையத்தில் வழக்கறிஞர் பாண்டி புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்ற பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்ற உத்தரவின்பேரில், மணப்பாறை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். எதிர்வரும் மூன்று நாட்கள் கையெழுத்திட உள்ளார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP