நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
 | 

நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரிய வழக்கை  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் கைதான உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது 3 பேருமே ஜாமீனில் உள்ளனர்.  

சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்கின் இன்றைய விசாரணை நடைபெற்ற நிலையில், நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

மேலும், சிபிசிஐடி விசாரித்து குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து, சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக்கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் நிர்மலா தேவி தொடர்பான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையையும் நீக்கி உத்தரவிட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP