குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு: டி.என்.பி.எஸ்.சி பதில்!

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் டி.என்.பி.எஸ்.சி இன்று பதில் மனு தாக்கல் செய்தது.
 | 

குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு: டி.என்.பி.எஸ்.சி பதில்!

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இன்று பதில் மனு தாக்கல் செய்தது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டதாகவும், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது எதிர்மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கிற்கு பதிலிறுக்கும் வகையில், டி.என்.பி.எஸ்.சி இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் 7 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் தவறானவை என்பது தெரியவந்தது.

அந்த நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் 6 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  மேலும், நிபுணர் குழுவின் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது எனவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அதையடுத்து வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP