‘உயிர்சேதம் ஏற்பட்டால் பொறுப்பேற்க முடியாது’

வெள்ளியங்கிரி வனப்பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் இடத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
 | 

‘உயிர்சேதம் ஏற்பட்டால் பொறுப்பேற்க முடியாது’

வெள்ளியங்கிரி வனப்பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் இடத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

வெள்ளியங்கிரி வனப்பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்படுவதற்கு எதிராக  லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், வனத்துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், ‘வெள்ளியங்கிரி வனப்பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் இடத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. வனவிலங்குகளால் மனித உயிர்பலியானால் பொறுப்பேற்க முடியாது. வீடுகள் கட்டப்படும் இடத்தில் யானைகளுக்கு பிடித்தமான பயிர்கள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளின் நடமாட்டத்தை அறிந்துகொள்ள கேமரா பொருத்த வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP