BREAKING: திங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை; இல்லாவிட்டால் கைது - நீதிமன்றம் பாய்ச்சல்

வரும் திங்கள்கிழமைக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது குறித்த தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை தெரிவித்துள்ளது.
 | 

கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தமிழக உள்ளாட்சித் தேர்தல், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட வரும் நிலையில், மாநில தேர்தல் ஆணையத்திடம் உயர் நீதிமன்றம் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுகளை தொடர்ந்து இதுவரை தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யாமல் தாமதித்து வருவதால், கோபத்திற்கு ஆளான நீதிபதிகள், வரும் திங்கள்கிழமைக்குள் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். அப்படி தாக்கல் செய்யாவிட்டால், மாநில தேர்தல் ஆணையர் கைது செய்யப்படுவார் என உயர் நீதிமன்ற தலைமை  நீதிபதி எச்சரித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP