கொடநாடு விவகாரம் குறித்து முதல்வரும் பேசத்தடை! - உயர்நீதிமன்றம்

கொடநாடு கொலை விவகாரம் குறித்து ஸ்டாலின் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே பேச தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தடையை மீறி செயல்பட்டால் நீதித்துறையில் தலையிடுவதாக கருதப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

கொடநாடு விவகாரம் குறித்து முதல்வரும் பேசத்தடை! - உயர்நீதிமன்றம்

கொடநாடு கொலை விவகாரம் குறித்து ஸ்டாலின் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே பேச தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது, கொடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் பழனிசாமியை தொடர்புபடுத்தி பொய் பிரச்சாரம் செய்வதாகவும், எனவே அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கொடநாடு விவகாரம் குறித்து பேச தடை கோரியும் அதிமுக செய்தித் தொடர்பாளர் முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், கொடநாடு விவகாரம் குறித்து தேர்தல் பிரச்சாரங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்தது பேசினால், அவதூறு வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்றும் ஸ்டாலின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில், ஸ்டாலின் மட்டுமின்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொட நாடு விவகாரம் குறித்து பேச தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தடையை மீறி செயல்பட்டால் நீதித்துறையில் தலையிடுவதாக கருதப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP